Followers

Thursday, 22 October 2015

மதம் மாறினால் என்ன ஜாதி?



ஒருவர் இந்து மதத்திலிருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறுகிறார். உதாரணத்திற்கு ஒரு பிராமணர் (இளித்தவாய் சமுதாயம் இதுதானே) இவர் முஸ்லீம் பிராமணராவாரா? நான் புத்த மதத்திற்கு மாறுகிறேன். இந்து மதத்தின் ஜாதியை புத்தமதத்திலும் சேர்த்து வைத்துக்கொள்ள முடியுமா? மதம் மாறிய பின்னர் புத்த கோனார் என்றோ, புத்த நாடார் என்றோ வைத்துக்கொள்ள முடியாது. அதுபோல் முஸ்லீம் பிராமணன் என்று ஒரு ஜாதி கிடையாது.  

இதேபோல் ஒரு அமெரிக்கன் இந்து மதத்திற்கு மாறுகிறான். அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது? இந்து மதத்தின் எந்த ஜாதியிலும் அவரை சேர்க்க முடியாது? அவர் சைவத்தைப் பின்பற்றினால் சைவர். வைஷ்ணவத்தைப் பின்பற்றினால் வைஷ்ணவர். ஒரு பட்டாணி முஸ்லீம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார். அவர் கிறிஸ்தவ பட்டாணியா? கிடையாது. இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒருவர் மதம் மாறிவிட்டால் அவருடைய முந்தைய மதத்திலிருந்த ஜாதி தொடர்புகள் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவற்றை பயன்படுத்த முடியாது

 மலைவாழ் பழங்குடியினர்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாறிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர்களிடம் மலைவாழ் பழங்குடியினரின் எந்த அடையாளங்களும் இருக்காது. உடை மாறிவிடும். சடங்குகள் சம்பிரதாயங்கள் மாறிவிடும். விழாக்கள் மாறிவிடும். அவர்கள் பிறப்பால் நான் பழங்குடி இனத்தவன் எனக்கு சலுகைகொடுங்கள் என்று கேட்பது எப்படி நியாயமாகும்? உச்ச நீதிமன்றமும் மதம் மாறியவர்கள் ஜாதியை இழந்துவிடுகிறாா்கள் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 

உண்மை இப்படி இருக்க கிறிஸ்தவ முட்டாள்கள் மட்டும் இந்து மதத்தின் ஜாதியை பயன்படுத்தி குழப்பத்தை உண்டாக்கி வருகிறார்கள். இது மிஷநரிகளின் சுழ்ச்சி. கிறிஸ்தவ நாடார், கிறி்ஸ்தவ கோனார், கிறிஸ்தவ ஆதிதிராவிடர், என்று வைத்துக்கொண்டு தங்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கமும், நீதிபதிகளும் துணை போவது விந்தையிலும் விந்தை. பொதுவாக ஒருவர் மதம் மாறிவிட்டால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவரை தங்களுடன் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதனால் அவர்கள் சமுதாயத்தில் மதமாற்றங்கள் குறைவாக இருக்கும். ஆனால் இந்த நாடார்களும், ஆதி திராவிடர்களும் பிறப்பால் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் பெண்கொடுத்து பெண் எடுத்து உறவு கொண்டாடுகின்றனர். இதனால் பெண் கொடுத்தாலும், பெண் எடுத்தாலும் மதம் மாறுவது இந்துவாக இருப்பதால் மேற்படி இரு சமுதாயங்களிலும் மதமாற்றம் அதிகம் நடைபெறுகிறது

மதம்மாறிகளுடன் எந்த சாதியினராக இருந்தாலும் திருமண தொடா்பு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள். அது உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம். கூட இருந்து உங்களுக்கு குழி பறித்துவிடுவாா்கள்.



3 comments:

  1. அருமையான பதிவு...

    ReplyDelete
  2. மெல் சாதியில் உள்ளவன் கீழ்சாதிகாரனை நய்யப்புடைக்கும்போது கொடுமைப்படுத்தும்போது கொல்லும்பொது அவர்கள் நாங்களும் ஹிந்து மதத்தினர்தானே ஏன் எங்களை மட்டும் இவர்கள் தனிப்படுத்துகிறார்கள் என்ற விரக்தியில் மதம் மாற முடிவெடுத்து மதம் மாறுகிறார்கள். இதில் கிறிஸ்தவர்களின் தூண்டுதலோ முஸ்லிம்களின் தூண்டுதலோ இல்லை ஏனென்றால் ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் தங்கள் மதத்தினரையே கொலைசெய்யும் அவலம். முட்டாள்கள் ஹிந்துக்கள் எப்படி என்றால் அவர்களுக்கு சாதி என்னும் வேஷம். அப்படியென்றால் மேல்சாதிகாரர்கள் மட்டும் ஹிந்துவாய் இருந்துவிடவேண்டியதுதானே. இது எப்படி உள்ளது என்றால் பாம்பு தன் குட்டியை தானே உண்பது பொல். முதலில் சாதி கொடுமைகளை களைந்துவிட்டு பாருங்கள் மதம் மாறுகிறார்களா என்று. முட்டாள் சாதியினரே

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கருத்து நண்பா சூப்பர் நண்பா

      Delete