ஹிந்துவாக மாறினால் பெயரையும் மாற்ற
வேண்டுமா? ஹிந்துவாக ஆவதற்கு பிற
மதங்களில் போல்
விசேஷ
சடங்குகள் (ஞானஸ்நானம், சுன்னத்) ஏதும்
கிடையாது. ஒருவர்
மனதளவில் ஏற்றுக்கொண்டு இந்து
வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்தாலே இந்துவாகி விடுகிறார். சில
அமைப்புகள் இந்துவாக மதம்
மாறுவதற்கு சில
சடங்குகளை நடத்துகின்றன என்றாலும் அச்சடங்குகளை செய்தால்தான் இந்துவாகிறார் என்று
பொருளல்ல. எனவே
ஒருவர்
இந்து
மதத்திற்கு மாறிவிட்டால் பெயரையும் இந்துப்பெயராக மாற்றி
வைத்துக்கொள்ள வேண்டுமா? என்று
சிலருக்கு சந்தேகம் வரும்.
நம்
மதத்தில் எப்பொழுதும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. பெயரை
மாற்றி
வைத்துக்கொள்வதோ, மாற்றாமல் வைத்திருப்பதோ அவரவர்
விருப்பம். எனக்குத் தெரிந்த சில
இந்து
மதத்திற்கு மாறிய
நண்பர்கள் தங்கள்
பழைய
பெயரை
மாற்றாமலேயே இருந்து வருகின்றனர். இந்து
மதத்தில் இந்துப்பெயரை வைத்துக்கொள்வதற்கு ஒரு
தாத்பரியம் உண்டு.
பொதுவாக இந்துக்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள் தங்கள்
குல
தெய்வங்களின் பெயர்களாகவோ, இஷ்ட
தெய்வங்களின் பெயர்களாகவோ, தாத்தா
பாட்டி
பெயர்களாகவோதான் இருக்கும். நாம்
கணபதி,
முருகன், ஐயப்பன், சிவன்,
சக்தி,
நாராயணன் என
பல
தெய்வங்களை வணங்குகிறோம். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஆயிரக்கணக்கான பெயர்கள் இருக்கின்றன. நமக்கு
பிடித்த ஒரு
தெய்வத்தின் பெயரையோ பலதெய்வங்களின் பெயரை
கலந்தோ
வைத்துக்கொள்கிறோம். எந்தப்
பெயரால் அழைத்தாலும் அது
இறைவன்
பெயராகத்தான் இருக்கும்.
ஒருசில
நவநாகரீக மேதாவிகள்தான் இறைவன்
பெயரை
வைக்காமல் நாகரீகமாக வைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் உங்கள்
குழந்தைக்கு தெய்வத்தின் பெயரை
வைத்து
அழைக்கும்போது உங்களை
அறியாமல் இறைவன்
பெயரை
பலமுறை
அழைக்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள்
குழந்தையை அழைக்கும் அனைவருமே இறைவன்
பெயரை
உச்சரிக்கிறார்கள். இறைவன்
பெயரை
எப்போதும் உச்சரித்த வண்ணம்
இருக்க
வேண்டும் என்பதே
இறைவன்
பெயரை
வைத்துக்கொள்வதன் அடிப்படை காரணம்.
இந்த
சிறப்பு இந்து
மதத்திற்கு மட்டுமே உண்டு.
பொதுவாக மரண
காலம்
வந்துவிட்டால் நமக்கு
இறைவன்
நினைவு
வருவதற்கு பதிலாக
தம்
பிள்ளைகளின் நினைவுதான் வரும்.
அப்போது தம்
பிள்ளைகளை அழைக்கும்போது அது
இறைவன்
பெயராக
இருப்பதால் மரணதருவாயில் இறைவனை
அழைத்ததால் அவர்களுக்கு நற்கதி
கிட்டும் என்பது
ஐதீகம்.
சிலர்
தங்கள்
குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை
வைத்துவிட்டு கூப்பிடும்போது சுருக்கி இரண்டெழுத்தில் நவீனமாக அழைக்கிறார்கள். இது
தவறு.
இதனால்
பலன்
ஏதும்
கிடையாது.
இந்து
மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய
சிவனின் பெயரைக் கொண்ட
ஒரு
பெந்தேகொஸ்தே நண்பரை
தெரியும். அவரிடம் உங்கள்
பெயர்
என்ன
என்று
கேட்டபோது அவர்
சிவன்
பெயரை
சொன்னார். உடனே
”பாருங்கள். நீங்கள் உங்களை
அறியாமல் சிவபெருமானின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை
அழைப்பவர்களும் சிவபெருமானை அழைக்கிறார்கள்” என்றேன். அதுமுதல் கிறிஸ்தவ பெயரையே வைத்துக்கொண்டார். சில
கிறிஸ்தவர்கள் சலுகைகளுக்காக இந்துப்பெயர்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்தையும் இறைவனையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி
எல்லாம் ஏமாற்றி சலுகை
பெறவேண்டுமா.? இவர்களை அவர்களின் இறைவன்தான் திருத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு இறைவன் பெயரையே வைத்து முழுமையாக கூப்பிடுங்கள்.
No comments:
Post a Comment