Followers

Tuesday, 20 October 2015

இயேசுவை விசுவாசிக்காவிட்டால் நரகமா?


இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். விசுவாசியாதவரோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்என்று பைபிள் கூறுகிறது. ஆனால் இந்த வசனத்தை இயேசு கூறவில்லை. என்னை விசுவாசிக்காவிட்டால் நரகத்திற்கு போவீர்கள் என்று”. அவருடைய அடிப்பொடி மாற்குசீடர்தான் கூறியுள்ளார்.  

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று இயேசுதான் கூறியுள்ளார். நாம் அவருடைய கன்னத்திலும் அறையவில்லை. அவரை தூஷிக்கவும் இல்லை. அவரை வழிபடாததற்காக நாம் நரகத்திற்கு செல்வோம் என்றால் அவர் கூறிய வசனங்களை அவரே கடைபிடிக்கவில்லை என்றாகி விடுகிறது.  

மேலும் அவ்வசனத்தின்படி இயேசுவை விசுவாசிக்காதவர்கள் எல்லோரும் நரகத்திற்கு செல்வார்கள் என்றால் சில கோடி கிறிஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றாகிறது. அந்த கோடி கிறிஸ்தவர்களிலும் பாவம் செய்தவர்களும் சொர்க்கத்திற்கு செல்வார்களா? ஆக மொத்தத்தில் உலகில் பெரும்பான்மையான பல கோடி மக்களை நரகத்திற்கு அனுப்புவது கடவுளின் செயலாக இருக்குமா? இதில் கர்த்தர் கருணை மயமானவர். அன்பே உருவானவர் என்று பிரசங்கங்கள் வேறு. எது உண்மை. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கர்த்தர் பெரிய கொலையாளி. பல லட்சம் எகிப்தியர்கள், கானானியர்கள், எப்புசியர்கள் என வேற்று இன மக்களை கொலை செய்ய உத்தரவிடுகிறார். இவர் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம் என்று நினைக்கவில்லை.  

இஸ்ரவேல் மக்களை மட்டுமே பாலும் தேனும் ஓடும் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று வழிகாட்டுகிறார். இஸ்ரவேல் மக்களுக்காக மோசேயிடம் கூறிய வார்த்தைகளில் நடுவில் சில வார்த்தைகளை ஏதோ உலக மக்களுக்கு ஏசு கூறியது போல் விளம்பரம் செய்கிறார்கள். இதை முட்டாள் கிறிஸ்தவர்களும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ”ஞானஸ்நானம் பெற்று விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன அவர்கள் சர்ப்பங்களைக் கையில் எடுப்பார்கள். வியாதியஸ்தர்கள் மேல் கையை வைப்பார்கள். அவர்கள் குணமாவார்கள் . அவர்கள் சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது என்றும் முடவர்கள் நடக்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் மரித்தோர் எழுந்திருக்கிறார்கள் என்றும் பைபிள் கூறுகிறது. மரித்தோரை எழுப்புங்கள் என்றும் இயேசு சொல்கிறார். ஆனால் எந்த விசுவாசியாலும் மரித்தோரை எழுப்பவோ விஷத்தைக் குடித்துக் காட்டவோ முடியாது. எனவே பைபிள் வசனம் உண்மை இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அதனால் முதல் வரியில் கூறியுள்ள வசனமும் பொய்தான்.

No comments:

Post a Comment