Followers

Thursday, 22 October 2015

பூகம்பமும் இயேசுவும்



2001-ஆம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் வந்தபோது டாக்டர்.சிவசக்திபாலன் அவர்களின்குருகுலத்தென்றல்சமூக விஞ்ஞான ஆன்மீக இதழில் 2001 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வெளிவந்த கட்டுரை. என் மனதைக் கவர்ந்ததால் அதை அப்படியே இங்கே வெளியிட்டுள்ளேன்.

 பூகம்பத்தை இயேசு கிறிஸ்துதான் ஏற்படுத்தினார் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்களே - இது உண்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிவகாசி.கே.சிவா அவர்கள். இதற்கு என்ன பதில் சொல்வது? ஏதோ இந்துக்கள் எல்லோம் மதவெறியர்கள் என்கின்ற பாணியில் கூச்சலிடுவோர் - அதற்காகவே தேவன் பூகம்பத்தை ஏற்படுத்தினார் என்று புலம்புகின்றவர்கள் எல்லோரும் தேவனின் மகத்துவத்தை அறியாதவர்கள். உலகில் நடைபெறும் நன்மைகளுக்கெல்லாம் காரணம் தேவன் என்பதும் தீமைகளுக்கெல்லாம் காரணம் சாத்தான் என்பதும் கிருஸ்துவத்தின் அடிப்படை நமபிக்கை.  

இன்று பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள தீமைகளுக்கு இயேசுவே காரணம் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உண்மையான கிறிஸ்தவர்கள் அறிவார்கள். மத நல்லிணக்கத்திற்கு அடிப்படை என்ன? மதம் என்பது மனிதனின் அடிப்படை உணர்ச்சி. இதை மறைக்கச் சொல்வதோ அல்லது வேறு மதத்திற்கு மாறச் சொல்வதோ எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே ஒவ்வொருவரும் தத்தம் மதத்திலேயே இருக்கட்டும். தத்தம் மத சடங்குகளையே அனுஷ்டிக்கட்டும். இன்னும் தத்தம் மதம் சொல்கின்ற வழியெல்லாம் போகட்டும். ஆனால் அதே மாதிரி அடுத்த மதத்தவர்கள் செய்கிறதையும் நாம் மதிக்கணும் - அதற்கு பக்க பலமாய் இருக்கணும் - அதை கேலி பேசுவதோ கிண்டல் பேசுவதோ மனம் புண்படும்படி பேசுவதோ கூடாது. இதுதான் மதக் கலவரங்களுக்கு முடிவு கட்டும் மத சமரங்களுக்கு தீர்வு கொண்டு வரும்

 நான் ஹிந்து - நான் முஸ்லீம் - நான் கிருஸ்துவன் என்று கூறிக்கொள்வது என்றுமே மதவாதம் ஆகாது. அதே மாதிரி நீ ஹிந்து - நீ முஸ்லீம் - நீ கிறிஸ்தவன் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கணும். ஆனால், எனக்குத்தெரிய எல்லா கிறிஸ்தவர்களும் நேரிடையாகவே ஹிந்து மதத்தை கேலி பேசுகின்றார்கள். ஹிந்து தெய்வங்களைப் பழித்துப் பேசுகிறார்கள்

 எனது பால்ய நண்பன் - ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் பழகி வருபவன் - நான் சாத்தான் பெயரை வைத்திருக்கின்றேன் என்று எவ்வித தயக்கமும் இன்றி நேரிடையாகவே கூறுகின்றான். ஏறத்தாழ இப்படி ஹிந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று எல்லா கிறிஸ்தவர்களும் பழிக்கின்றார்கள். இத்தகைய மனோபாவங்களே மதத்துவேஷத்தின் வித்துக்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. பொதுவாக வேறு மதத்தவர்கள் அடுத்த வீட்டில் இருப்பார்கள். அல்லது அடுத்த தெருவில் இருப்பார்கள். அல்லது ஊரில் வேறு ஏதோ மூலையில் இருப்பார்கள். ஆனால் ஹி்ந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று கூறிக்கொண்டு இந்த கிருஸ்தவர்கள் நம் சொந்தத்திற்குள்ளேயே இருப்பார்கள். நம் குடும்பத்திற்குள்ளேயே இருப்பார்கள் - நம் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள். குடும்பத்திற்காக நாம் படாதபாடு பட்டு ஒரே மூச்சாய் உழைத்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் ஒரே மூச்சாய் நம் குடும்பத்தில் மதமாற்றும் முயற்சியில் திருட்டுத்தனமாய் மறைமுகமாய் நயவஞ்சகமாய் முயற்சித்துக்கொண்டிருப்பார்கள். இதனால் எத்தனை குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன தெரியுமா? இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவோர் - சாத்தான் வேலை செய்வோர் இந்து தெய்வங்களை சாத்தான் என்று கூறுவதுதான் விந்தையிலும் விந்தை

 ஒருநாள் மதியம் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பாதிரியார் வந்து என்னை எழுப்பினார். தான் Spirit-டுடன் வந்துள்ளதாகவும், என்னுடன் பேச வேண்டும் என்பதற்காகவே ஸ்பிரிட் அவரை என்னிடம் அழைத்து வந்துள்ளதாகவும் கூறினார். Spirit - எனக்கு முதலில் எதுவுமே புரியவில்லை. அப்புறம்தான் தேவனின் பரிசுத்த ஆவி அவர் மீது இறங்கி இருப்பதாய் அவர் விவரித்தார். எங்க ஆளுங்க அருள்வந்து விட்டது என்று கூறுவார்கள் - நீங்கள் Spirit வந்துவிட்டதாய் கூறுகின்றீர்கள்என்று கூறினேன். அவ்வளவுதான் ஸ்பிரிட்-டுக்கு என் மீது கடுங்கோபம் வந்துவிட்டது. Spirit- மட்டும் மிகப்பெரிய அதிசயமாய் அவர் விவரித்தார். நான் தொடர்ந்து - எல்லா மத வாதிகளும் கிட்டதட்ட ஒரே மாதிதிதான் நடந்து கொள்கின்றீர்கள். ஒரே செயலைத்தான் செய்கின்றீர்கள். திருநீறு போட்டு எத்தனையொ பேர் நோய்களைக் குணமாக்கி காட்டுகின்றார்கள். மசுதிக்கு சென்று ஓதி தாயத்து கட்டி எத்தனையொ பேர்களின் நோய்கள் குணமாகின்றன. நீங்கள் பரிசுத்த ஆவியின் பெயரால் நோய்களை சொஸ்தமாக்குகின்றீர்கள். எல்லா மதத்திலும் எதிர்காலங்களைப் பற்றி குறி சொல்பவர்கள் இருக்கின்றார்கள். எதுவும் உயர்ந்தது இல்லை.வித்தியாசமானதும் இல்லை. அது அதிசயம் என்றால் இதுவும் அதிசயம் தான். இது ஏமாற்று வேலையென்றால் அதுவும் ஏமாற்றுவேலைதான் என்று கூறினேன்.  

அந்த Spirit முடிவாக பன்றிகளுக்கு முன்னால் முத்தைப் போட்டு பிரயோஜனம் இல்லை என்று பைபிள் வசனத்தைக் கூறி சென்றது. இதில் யார் பன்றி - யார் முத்து என்பதை யார் தீர்மானிப்பது? நோய்நொடி - தொழில் - பிள்ளைபேறு - கடன் - குடும்பப்பிரச்னை - திருமணம் - படிப்பு - வேலை வாய்ப்பு இப்படி தினம் தினம் மனிதனுக்கு ஆயிரம் பிரச்னைகள். கோயில் - சர்ச் - மசுதி இவற்றின் வாசலில் நின்றபடிஏன் இங்கு வந்து போகின்றீர்கள்என்று வருவோர் போவோரிடம் கேட்டு பாருங்கள். ஒவ்வொரு மனிதனும் தான் அனுபவித்த - உணர்ந்த அற்புதங்களைப் பற்றி அரிய உண்மைகளைக் கூறுவார்கள். தன் வேண்டுதல்களுக்குப் பலன் கண்கூடாய் காண்கின்றபோதே கோயில் - சர்ச் - மசுதி இவற்றின் மீது மனிதன் நம்பிக்கையினை வளர்த்துக் கொள்கின்றான். ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் வேண்டுதல்கள் மாத்திரமே பலிக்கின்றன என்று கூறுவதுதான் இந்த உலகத்தின் மிகப்பெரிய மூடநம்பிக்கையாகும். உண்மை இவ்வாறு இருக்க - யார் பன்றி யார் முத்து என்பதை யார் தீர்மானிப்பது? எந்த மதத்தாரிடம் மட்டும் விசேஷித்த சக்தி இருக்கு?  

ஒரு கிறிஸ்தவ துண்டு பிரசுரம் கண்டேன். ஒரு பெண்மணிக்கு தீராத வியாதியாம். திருச்செந்தூர் முருகனை வேண்டி பாதயாத்திரை சென்றார்களாம். எல்லா கோயில் குளங்களுக்கும் சென்றார்களாம். எந்தளவு வேண்டினார்களோ அந்தளவு கடவுள் எட்டாத தூரத்தில் இருப்பதை உணர்ந்தார்களாம். கடைசியாய் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தார்களாம். அவ்வளவுதான் உடனே நோய் குணமாகிவிட்டதாம். பாவம். ஹிந்து கோயில்களுக்குச் செல்பவர்களெல்லாம் நோயினால் வீங்கிச் செத்து்ப் போவார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே குத்துக்கல்லாய் நோய் நொடி இல்லாமல் வாழ்வார்கள். நம்பிக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ நாடுகளில் யாருக்கும் எந்த நோயும் வரவே வராது. அங்கெல்லாம் மருத்துவமனைகள் ஏன் கட்டப்படுகின்றன என்பது எனக்கு இதுவரை புரியவே இல்லை. எய்ட்ஸ் நோய் கிறிஸ்தவ நாட்டிலிருந்து தானே தோன்றியது. எனக்கு நெருக்கமான சிலபேர் திடீரென்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார்கள். கேட்டால் யாருக்கோ புற்றுநோய் ஜெபம் பண்ணியே சரியாகி விட்டதாய் கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறிய அதே நபர் மூன்று நான்கு வருடங்களில் புற்றுநோயினால் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவிக்க முடியுமோ அவற்றை அனுபவித்து செத்துப் போனார்.  

யாரைக் காட்டி இந்த ஆசாமிகள் மதம் மாறினார்களோ அவர் செத்தபின்பும் இந்த ஆசாமிகள் இன்னும் வீம்புக்கு கொட்டடித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த அதிசயங்களை என்னவென்று கூறுவது? நோய்களை குணமாக்குவதைக்கொண்டு தான் ஒரு தேவனின் மகிமை அளக்கப்படுகின்றது என்றால் அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கூட கடவுள்தான். சிவகாசி இன்ஷ்யுரன்ஸ் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் எனக்கு ஒரு நற்செய்தி கூறி என்னை மதம் மாற்ற முயற்சித்தார். அவரது மகனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் கொண்டிருந்ததாம். பக்கத்து வீட்டு பாதிரியார் ஜெபம் பண்ணியவுடன் அவரது மகனுக்கு எல்லாம் சரியாகிவிட்டதாம். அதனால் நானும் ஜெபக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். இந்த மாதிரி பத்தாம் பசலித்தனத்திற்கு என்ன பதில் சொல்வது? சிவகாசி ஊருக்குள் கிட்டத்தட்ட எண்பது மருத்துவர்கள் இருக்கின்றோம். எங்களிடம் முறையான மருத்துவம் செய்திருந்தால் ஏன் பாதிரியாரிடம் செல்ல வேண்டிய அவசியம் நேருகின்றது. எண்பது மருத்துவர்கள் இருந்தும் இவர் மதம் மாறி இருக்கின்றார். ஆனால் இந்த அடிப்படை வசதிகளே இல்லாத அந்த காலத்தில் இந்த நண்பரை வளர்த்து ஆளாக்க - இவருக்கு வந்த நோய்களை தீர்க்க - இவரது அம்மா அப்பா நிச்சயமாய் பாதிரியாரை நாடவில்லை என்பது கண்கூடான உண்மை.  

மனிதன் தோன்றிய அன்றே தோன்றிய இவரது பரம்பரை இன்றுவரை நோய் நொடிகளைத் தாண்டி வந்ததினால் தானே இன்று இந்த நண்பராய் பரிணமிக்க முடிந்தது. அன்றெல்லாம் பாதிரியாரா இவரது பரம்பரையைக் காப்பாற்றினார்? நம்ம மாரியம்மனும் காளியம்மனும்தானே காப்பாற்றினார்கள்? இதைக்கூட உணர முடியாத இந்த நண்பரால் எதை சாதிக்க முடியும்? இந்த மாதிரி அவசர ஆத்திரத்திற்கு மதம் மாறுகின்றவர்கள் அடிக்கின்ற லூட்டி இருக்கின்றதே -- அப்பப்பா .. இத்தகையவர்கள் தான் மத துவேஷங்களுக்கும் மத கலவரங்களுக்கும் வித்திடுகின்றார்கள். இது எப்படி என்பதை அடுத்து விளக்குகின்றேன்.

 ”பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்என்றார் வள்ளுவர். பண்பாடு உள்ளவர்கள் தனக்கு விஷத்தை த்தான் அளிக்கின்றார்கள் என்பதை அறிந்தும் நாகரீகம் கருதி அன்பை விரும்பி அதை உண்டு மகிழ்வார்கள் என்கின்றார் வள்ளுவர். இது தமிழர் பண்பாடு . பழகிய பழக்கத்திற்காக - உறவிற்காக - நட்பிற்காக - அன்பிற்காக கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் தமிழர்கள். இது உயரிய பண்பாடு ஆகும். பழக்கத்திற்கு - உறவிற்கு - நட்பிற்கு - அன்பிற்கு அளிக்கும் மரியாதை ஆகும். ஆனால் இன்று மிகப்பெரிய அநாகரீகம் மதத்தின் பெயரால் பண்பாடு இன்றி விதைக்கப்படுகின்றது. ஹிந்துக்கள் அளிக்கும் விருந்துகளைப் புறக்கணிக்க வேண்டுமாம். அப்படியென்றால்தான் நாளை தேவன் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமளிப்பார்களாம். ஏனென்றால் ஹிந்துக்கள் அளிக்கும் விருந்துகள் சாத்தானுக்குப் படைக்கப்பட்டவைகளாம். நான் எத்தனையோ கிறிஸ்துமஸ் விருந்துகளில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் கிறிஸ்தவர்களை நம் வீட்டு தீபாவளி விருந்துக்கு வரச்சொல்லுங்கள் - வரமாட்டார்கள். இது மாதிரி நம் வீட்டு விசேஷங்களில் பலவற்றை அவர்கள் புறக்கணிப்பார்கள். அப்படி புறக்கணிப்பவர்கள் நம்முடன் நெருங்கி பழகியவராய் இருப்பார்கள். நெருங்கிய நண்பர்களாய் இருப்பார்கள். நமது அன்பிற்கு மிகவும் பாத்தியப்பட்டவர்களாய் இருப்பார்கள். அப்படி நெருங்கியவர்களாய் இருப்பவர்கள் நம்மை புறக்கணிப்பது . அதுவும் மதத்தின் பெயரால் புறக்கணிப்பது எத்தனை இழிவான செயல் என்பதைக் கூட அவர்கள் உணர்வதில்லை.  

எந்த மனிதனை பழக்கம் - உறவு - நட்பு - அன்பு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் கடவுள் படைத்திருக்கின்றான்? பின் ஏன் இந்த மனிதர்கள் மட்டும் கடவுள் பெயரால் இவற்றைப் புறக்கணிக்கின்றார்கள்? ஒருமுறை திடீரென்று மதம் மாறிய இருவர் தனது சொந்த பந்தமெல்லாம் குலதெய்வம் கோயிலினுள் இருக்கும்போது கோயிலைச்சுற்றி இருக்கும் காட்டிற்குள் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஏன் இந்த பிரிவினை? ஏன் இந்த துவேஷம். இப்படி சொந்தங்களிடமிருந்து அந்நியப்பட்டு போவதா தேவனை மகிமைப்படுத்தும் செயல்? போன வருடம் ரோடுரோலர் என்மீது ஏறிச் சென்றது. மிகக் கோரமான அந்த விபத்திலிருந்து நான் மீண்டேன். கடவுளின் பெருங்கருணை ஹிந்துவாகிய எனக்கும் கிட்டியதால்தானே நான் உயிருடன் மீள முடிந்தது. பின் மதம் மாற வேண்டிய அவசியம் என்ன?  

ஏன் கிறிஸ்தவ மிஷநரிகள் வெளிநாடுகளிலிருந்து கோடி கோடியாய் பணம் பெற்று மதம்மாற்றும் முயற்சிகளில் இறங்குகின்றன? இவர்கள் என்ன அரசியல் கட்சியா நடத்துகின்றார்கள் காசுக்கு ஆள் சேர்ப்பதற்கு? ஏதோ இவர்கள் மதத்தில் சேர்ந்தால் மட்டுமே கடவுளின் கருணை நமக்குக் கிடைக்கும் என்று கூறும் இந்த கிணற்றுத் தவளைகள் கடவுளின் கருணை என்னும் மாபெரும் கடலை அறியாதவர்கள். அக்கடலைப் பற்றித் துளிக்கூட உணர முடியாதவர்கள். மத்திய அமெரிக்க கிறிஸ்தவ நாடாகிய எல்சடாவரில் இவ்வாண்டு ஜனவரி 13ந்தேதியும் பிப்ரவரி 13ந்தேதியும் குஜராத் பூகம்பத்தை விட மிகப்பெரிய பூகம்பம் தாக்கியதே அது ஏன்? இந்திய மக்கள் குஜராத் பூகம்பத்தினால் சொல்லொணாத துன்பத்தில் துடிக்கும் போது ஹிந்துக்களைப் பழிவாங்கவே தேவன் பூகம்பத்தை ஏற்படுத்தினார் என்று சொல்லுவது மன்னிக்கவே முடியாத மிகப்பெரிய குற்றமாகும்.  

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்குபூகம்பமும் இயேசு கிறிஸ்துவும்என்ற கட்டுரையில் கிறிஸ்தவ மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஒரு முழுமையான புரிதலின்றி சிறு பிள்ளைத்தனமாக எழுதியிருப்பது கண்டு வேதனையடைந்தேன். கிறிஸ்தவம் என்பது தியகம். அன்பின் சின்னம். எனவே தன்னுடைய சுயகௌரவத்திற்காக வைக்கப்படும் உள்ளார்ந்த அன்பில்லாத விருந்தில் கலந்துகொள்ளாததால் அவர் பண்பாடு இல்லாதவராக மாறிவிடமாட்டார். ஒரு நல்ல கிறிஸ்தவன் கடவுளை வேறு வாழ்க்கையை வேறு என பிரித்துப் பார்க்க மாட்டான். எனவே மற்றொரு தெய்வம் என்று அழைக்கப்படும் ஒருவரின் விருந்தில் கலந்து கொள்வது அந்த கடவுளை ஏற்றுக்கொள்வதாகி விடும் என்பதற்காகவே விருந்தை தவிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே ஆண்டவரே மெய்யான தெய்வம் என்பது ஆகும். கிறிஸ்தவ மதத்தினர் செய்யும் தொண்டுகள் மகத்தான தியகத்தை ஆசிரியர் நினைத்துப்பார்க்க வேண்டும். இன்று இந்தியாவில் கிறிஸ்தவர்களாக இருப்பவர் அனைவரும் மதம் மாறியவரே ஆவார். தீமையை விட்டு விலகி கர்த்தரை தேடச்செய்வது கிறிஸ்தவ மதத்தினரின் முதன்மையான பணியாகும். கிறிஸ்தவ மதம் அன்பினால் வளர்க்கப்படுகிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு உங்களைப் போன்றவர்கள் துவேசம் கொண்டு எழுதுவது எங்களைப் பாதிக்காது. பாதிரியார்களை எரிப்பதன் மூலமாகவும், கன்னியாஸ்திரிகளை மானபங்கப்படுத்துவதன் மூலமாகவும் பைபிளைக் கொளுத்துவதன் மூலமாகவும், கிறிஸ்தவ மதத்தை தாக்கி கட்டுரை எழுதுவதன் மூலமாகவும் இந்து மதத்தை நன்றாக வளர்க்கின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பணி எத்தனை குருகுலம் வந்தாலும் அன்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். - .அந்தோணி கலிதீர்த்தான்பட்டி  

கடந்த ஆறு ஆண்டுகளாய்குருகுலத்தென்றல்ஹிந்து வேதங்களின் கருத்துக்களையே எடுத்துரைத்து வந்துள்ளது. ஆயினும் ஏராளமான கிறிஸ்தவ, முஸ்லீம் நண்பர்கள் குருகுலத்தென்றலை விரும்பி படித்தனர். ஆழ்ந்து படித்தனர். குருகுலத்தென்றலோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள். ஆன்மீக இதழ்களில் வரலாற்றில் யாருமே இதுவரை செய்திராத இச்சாதனையை குருகுலத்தென்றல் செய்து காட்டியுள்ளது. இதை எப்படி சாதித்துக் காட்டியது என்பதை வாசகர்கள் அறிவார்கள். மத ஒற்றுமை - மத சமரசத்திற்கு மாறுபட்ட கருத்தை இதுவரை குருகுலத்தென்றல் போதித்ததில்லை. மாறாக மத துவேஷத்தை அகற்றும் வழிமுறைககளைத்தான் இதுவரை எடுத்துரைத்துள்ளது. எனவே மதத்துவேஷத்தை தூண்டும் எந்த கருத்தையும் எதிர்த்துக் குரல் கொடுக்க குருகுலத்தென்றலுக்கு எந்த தயக்கமும் இல்லை. நண்பர் அந்தோணி தனது கடிதத்தில் அப்பட்டமான மதத்துவேஷத்தை காண்பித்துள்ளார். அதையும் கடவுள் வேறு வாழ்க்கை வேறு என்று தாம் எண்ணுவதில்லை என்று கடவுள் பெயரில் எடுத்துரைத்துள்ளார். தீமையை விட்டு விலகி கரத்தரைத் தேடச் செய்வது கிறிஸ்தவ மதத்தாரின் முதன்மை பணியென்று குறிப்பிடும் இந்த நண்பர் தீமை என்று கூறுவது எதைத் தெரியுமா? மற்ற மதத்தாரின் தெய்வங்களைத்தான். இப்படி அடுத்தவரின் மத நம்பிக்கைகளை தீமையென்று எடுத்துரைக்கும் தயக்கம் கூட இல்லாத நண்பர் அன்பைப் பற்றி குருகுலத்திற்கு போதிப்பதுதான் வியப்பளிக்கின்றது. இவரைப்போன்றே மற்ற மதத்தாரும் அடுத்த மதத்தை தீமையென்று கூற ஆரம்பித்தால் அப்புறம் உலகில் மத ஒற்றுமைக்கு ஏது வழி? நிம்மதிக்கு ஏது வழி? ஏதோ இந்த நண்பர் மட்டுமே கடவுளை குத்தகைக்கு எடுத்தவர் போன்று கடவுள் வேறு வாழ்க்கை வேறு என பிரித்துப் பார்ப்பதில்லையென்று கூறுகின்றார். ஒரு கிறிஸ்தவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளும் அன்பு - நட்பு என்னிடம் இருக்கின்றது. ஆனால் இவர் என்னை தவிர்த்து விடுவாராம். அப்புறம் அன்புக்கு என்ன அர்த்தம்? நட்புக்கு என்ன அர்த்தம்? இதே செயலை நானும் திருப்பிச் செய்தால் அன்பு நீடிக்க வழி உண்டா? நட்பு நிலைத்திருக்க முடியுமா? நான் ஒரு மருத்துவன். எனது இஷ்ட தெய்வத்தை அதாவது ஹிந்து தெய்வத்தை வண்ங்கியே என் தொழிலை நடத்துகின்றேன். ஆயினும் என்னிடம் எல்லா மதத்தினரும் மருத்துவம் செய்துகொள்கின்றார்கள். ஆக எனக்கும் என்னிடம் மருத்துவம் செய்துகொள்வோருக்கும் என் தெய்வம் இதுவரை தீமை ஏதும் செய்துவிடவில்லை என்பது தெளிவு. ஆனால் என் தெய்வத்தை வணங்கி நான் அளிக்கும் விருந்தை மட்டும் சாப்பிட்டவுடன் இவரது கடவுள் இவரை சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்தி விடுவார் நம்பிக்கொள்ளுங்கள்

 கிபி.36ஆம் ஆண்டு கர்த்தரின் நேரடி சீடர் செயிண்ட் தாமஸ் இந்தியா வந்தார். ஆயினும் கிறிஸ்தவ மதத்தினால் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் உலகமெல்லாம் காலூன்றியது. டச்சுக்கார்கள் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்கார்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தனது காலனி ஆதிக்க போர் வெறியின் மூலம் உலகையெல்லாம் அடிமைப்படுத்திக்கொடுங்கோல் ஆட்சி செய்தார்கள். அவர்களின் படைபலத்தின் மூலம் தானே உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் காலூன்ற முடிந்தது. இதையெல்லாம் மறைத்து கிறிஸ்தவ மதம் அன்பினால் வளர்க்கப்படுகின்றது என்று நண்பர் அந்தோணி கூறுவதை எல்லோரும் நம்பிக்கொள்ளுங்கள்.  

இந்து மதம் பாதிரியார்களை எரிப்பதன் மூலமும் கன்னியாஸ்திரிகளை மானபங்கப்படுத்துவதன் மூலமும் மட்டுமே வளர்க்கப்படுகின்றது - ஏற்றுக்கொள்ளுங்கள். ”ஒவ்வொருவரும் தத்தம் மதத்திலேயே இருக்கட்டும். தத்தம் மத சடங்குகளையே அனுஷ்டிக்கட்டும். இன்னும் தத்தம் மதம் சொல்கின்ற வழியெல்லாம் போகட்டும். ஆனால் அதே மாதிரி அடுத்த மதத்தவர்கள் செய்கின்றதையும் நாம் மதிக்கணும் - அதற்கு பக்க பலமாய் இருக்கணும் - அதை கேலி பேசுவதோ கிண்டல் பேசுவதோ மனம் புண்படும்படி பேசுவதோ கூடாது. இது தான் மதக் கலவரங்களுக்கு முடிவு கட்டும். மத சமரசங்களுக்கு தீர்வு கொண்டுவரும்மதத்துவேஷத்திற்கான எந்த செய்தியும் இதுவரை குருகுலத்தென்றலில் வந்ததில்லை. அன்புக்கு மாறுபட்ட எதையும் இதுவரை குருகுலம் போதித்ததில்லை. இயேசுவே மெய்யான தேவன். ஆனால் அந்தோணி போன்ற நண்பர்கள்?

 அதற்கு இயேசுவே பதிலளிக்கின்றார். ”பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் சித்தத்தின்படியே செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே ! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் (நியாயத் தீர்ப்பு நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போது நான் ஒருக்காலம் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன் (மத்தேயு.7 -21 , 22 , 23 ), 

 எனது கடிதத்தை அப்படியே பிரசுரித்த தங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். தங்களின் பதில் சிந்தனைக்குரியது. அந்தோணிச்சாமி, கலிதீர்த்தான்பட்டி



No comments:

Post a Comment