பைபிளின் தொடக்கமே அபத்தங்கள் நிறைந்தது. அறிவியலுக்கு முரணானது. ஆதியாகமம் 1ம் அதிகாரம் 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று. முதல் நாள் வெளிச்சத்தை படைக்கிறார். சிக்கிமுக்கி கல்லாலோ, மரங்களைக் கடைந்தோ படைக்கவில்லை. உண்டாகக்கடவது என்கிறார் உண்டாகிவிட்டது. இதைப் படைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? 1 நிமிடம்? 5 நிமிடம்? முதல் நாள் இருபத்து நான்கு மணி நேரத்தில் மீதி நேரங்கள் என்ன செய்தார்?
12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். 13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். 29 பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது. 30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று 12ம் வசனத்தில் புல் புண்டுகளையும் கனிகொடுக்கும் மரங்களையும் படைத்துவிட்டார். 27,28,29ம் வசனங்களில் ஆணும் பெண்ணுமாக மனுஷரை படைத்து பிற உயிர்களை ஆண்டுகொள்ள அவர்களுக்கு அனுமதி அளித்துவிட்டார். 6ம் நாள் முடிந்துவிட்டது. இப்பொழுது 2ம் அதிகாரத்திற்கு வாருங்கள் 2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார். 3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஒவ்வொரு நாளும் படைப்பு தொழிலை வாயினால் சொன்ன மாத்திரத்தில் செய்து 24 மணி நேரத்தில் மற்ற நேரங்கள் எல்லாம் சும்மா இருந்துவிட்டு ஏழாம் நாள் வண்டி இழுத்து களைத்துப் போனது போல் தனியாக ஓய்வெடுக்கிறார்? தனியாக ஓய்வு தேவையா? இப்பொழுது 5ம் வசனத்தைப் பாருங்கள் 5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. முதல் அதிகாரத்தில் செடிகள்,மரங்கள், மனுஷனைப் படைத்துவிட்டதாக கூறிவிட்டு 2ம் அதிகாரத்தில் படைக்கப்படவில்லை என்கிறது பைபிள். எவ்வளவு அபத்தம் பாருங்கள். 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். 15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 2ம் அதிகாரம் 7ம் வசனத்தில் மீண்டும் மண்ணினால் மனிதனைப் படைக்கிறார். ஜீவவிருட்சத்தின் கனிகளைப் புசித்தால் சாகவே சாவாய் என்று கட்டளையிடுகிறார். அந்த விருட்சத்தை அவர் படைக்காமல் இருந்திருக்கலாமே. பசியோடு இருக்கும் குழந்தை முன்பு தின்பண்டத்தை வைத்து சாப்பிடக்கூடாது என்று சொன்னால் என்ன செய்யும்? 22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் 3ம் அதிகாரம் 1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. 2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். கர்த்தரால் படைக்கப்பட்ட சர்ப்பத்திற்கு எப்படி குறிப்பிட்ட கனியை புசித்தால் நன்மை தீமை அறிவார்கள் என்று தெரிந்தது? நன்றாக கவனியுங்கள். இங்கே சாத்தான் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. கர்த்தர் கூறியது போல் ஆதாமும் ஏவாளும் கனியை உண்ணாமல் இருந்திருந்தால் அவர்கள் அங்கே உணர்ச்சியே இல்லாத ஜடமாக ஆடுமாடு போல்தானே திரிந்திருப்பார்கள்? அப்படி இருக்க ஏன் கர்த்தர் விரும்பினார்? பைபிள்படி பார்த்தால் ஆதாம் ஏவாள் சந்ததியினர் அறிவுடையவராகி ஆடை அணிந்திருக்க வேண்டும். இன்றும் அந்தமான், ஆப்பிரிக்க பழங்குடியினர் நிர்வாணமாக வாழ்கின்றனர். அவர்கள் ஆதாம் பரம்பரையினர் இல்லையா? 11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். 13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். 16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். இங்கே பாம்பை வயிற்றினால் ஊர்ந்து போக சபித்து, ஸ்திரீக்கு கர்ப்பவேதனையையும் தண்டனையாக அளிக்கிறார். இவர் சபிக்குமுன் பாம்பு நடந்தா சென்று கொண்டு இருந்தது? பாம்பை மண்ணைத் தின்பாய் என்று சபிக்கிறார். பாம்பு மண்ணையா தின்கிறது? கனியை உண்டதற்காக கர்ப்ப வேதனையை அவள் சந்ததி முழுக்க கொடுக்கிறார்? இதுவா கருணை? அதிகாரம்.4 1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 3 சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். 5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. 6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். 8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். 9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. 11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். 13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. 14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர். நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன். என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். 15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். இங்கே கர்த்தர் ஆபேல் கொடுத்ததை ஏற்கிறார். காயீன் கொடுத்ததை ஏற்க மறுக்கிறார். அதனால் அவன் தன் சகோதரனைக் கொல்கிறான். ஏன் ஏற்க மறுக்க வேண்டும்? காயீன் தன் சகோதரனைக் கொன்றபின் ஆதாம்,ஏவாள், காயீன் மூவரும்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்க காயீனைக் கண்டுபிடித்து கொல்ல எவன் வருவான்? அதைத் தடுக்க அடையாளம் வேறு போடுகிறார். 17 காயீன் தன் மனைவியை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். 25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் காயீன் தன் மனைவியை எப்படி அறிந்தான்? அவன் மனைவி எங்கிருந்து வந்தாள்? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? 25ம் வசனத்தில்தான் ஆதாம் சேத்-தை பெறுகிறான். அதிகாரம் 05 1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். 2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். 3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். 4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். 5ம் அதிகாரம் முதல் வசனத்தில் மீண்டும் பழைய பல்லவி வந்துவிட்டது. ஆதாம் மொத்தத்தில் 930 வருடம் உயிருடன் இருந்திருக்கிறான். கர்த்தர் கனியைப்புசித்தால் சாகவே சாவாய் என்று கூறிய வார்த்தை பொய்தானே?. சர்ப்பம் சொன்னதுதானே உண்மை? அதிகாரம்.6 3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். 4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். இங்கே கர்த்தர் மனிதனுடைய ஆயுள்காலம் 120 என்கிறார். ஆனால் நோவாவரை 500க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது திடீரென்று ராட்சதர்கள் வந்து விட்டார்கள். அதேபோல் தேவகுமாரர்களும் எங்கிருந்தோ வந்து பெண்களைக்கூடி பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ஆதாம் பரம்பறையில் 76வது தலைமுறையில் ஏசு பிறக்கிறார். இதை பைபிளின்படி கணக்கிட்டால் உலகம் படைக்கப்பட்டு 6ஆயிரம் ஆண்டுகளே ஆகிறது. பத்தாயிரம் ஆண்டுகள் என்றெ வைத்துக்கொள்ளுங்களேன். அதுவும் அக்காலத்தில் வருடத்திற்கு 10 மாதங்களே இருந்தன. பிற்காலத்தில் இரண்டு மாதங்களைக் கூட்டிக்கொண்டார்கள். அறிவியல் உலகம் படைக்கப்பட்டு 10ஆயிரம் ஆண்டுகள் என்றா சொல்கிறது? லட்சக்கணக்கான ஆண்டுகள் என்பது அறிவியல் சொல்லும் உண்மை. மேலும் ஆதாம் ஏவாள் கர்த்தருடன் பேசியதை யார் கேட்டு பதிவு செய்தார்கள்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இதை எழுதியவர்கள் வியாசர், வால்மீகி போன்ற முக்காலம் அறிந்த முனிவர்களா? யுதர்களின் தோரா என்ற புனிதநூலில் கூறப்பட்டுள்ளவற்றை சரியா?தவறா? என்று ஆராயாமல் பைபிளில் சேர்த்து புனித நூல் ஆக்கிவிட்டனர். எனவே ஆதாம், ஏவாள் கதை கட்டுக்கதையே
No comments:
Post a Comment