Followers

Monday, 23 November 2015

பிரசவ மருந்து

நம் முன்னோா்கள் உடல்நலம் காப்பதற்காக எத்தனையோ அரிய மூலிகை மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளனா். இந்த மருந்துகளில்  சிறப்பான ஒன்று பிரசவ மருந்து. பிரசவித்த பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் ஒரு அற்புத மருந்து. இதுபோன்ற ஒன்றை உலகில் வேறு யாராவது கண்டுபிடித்திருக்கிறாா்களா என்று தெரியவில்லை. இதன் சிறப்பு என்ன என்றால் பிரசவமான பெண்கள் இந்த மருந்தை சாப்பிடும் காலம் வரை மாதவிலக்கு ஏற்படாது. மருந்து சாப்பிடுவதை நிறுத்தினால் மாதவிலக்கு ஆரம்பமாகிவிடும்.  ஓராண்டு காலம் குழந்தை வளரும் வரை தாயின் சக்தி வீணாகாமல் காக்கிறது. மேலும் தாய்பால் அதிகரிக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும்.

இதில் 52 மருந்துகள் கலந்து தயாாிக்கும் ஒரு முறையும் உண்டு. எளிமையான மற்றொரு முறை தற்போது தரப்பட்டுள்ளது.
கடுகு 100 கி
திப்பிலி 25 கிராம்
சுக்கு   50 கிராம்
பெருங்காயம் 25 கிராம்
நறுக்குமூலம் 25 கிராம்
சித்தரத்தை  25 கிராம்
ஓமம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
சாரணை வோ் 50 கிராம்
இந்த மருந்து சரக்குகளை தனித்தனியே சுத்தம் செய்து  வறுத்து இடித்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். கால்கிலோ கருப்பட்டி மற்றும் 200 மிலி நல்லெண்ணெய் விட்டு தண்ணீர் சோ்க்காமல் இடித்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை 1 உருண்டை மாலை 1 உருண்டை என சாப்பிட்டு வர வேண்டும். ஒன்றரை ஆண்டுகளானாலும் மாதவிலக்கு ஏற்படாது. கருத்தடை சாதனமாகவும் செயல்படுகிறது. பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment