Followers

Monday, 23 November 2015

பிராடு தாயப்பனின் பொய்கள்


இவருடைய புத்தகத்தைப் படித்த கருணாகரன் என்ற முட்டாள் எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். சர்வவல்ல சர்வேஸ்வரன் இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து ஒருவரே, அவர் மாத்திரமே உண்மையான தெய்வம், அவரே சர்வ வல்ல தேவன். இந்த புமியையும், அண்ட சடாச்சரங்களையும் படைத்தவர் இவரே. சகல ஜீவ ராசிகளையும், மனிதனையும் படைத்தவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே என்ற சத்திய உணர;வும் தெளியும் ஏற்படும். அவர் அன்பே உருவானவர், கருணைக் கடல், அவருடைய இரக்கங்களுக்கு அளவே கிடையாது. அதன் ஆழ அகலத்தை அறிந்தவர் யாருமே இல்லை. பாருங்கள் இந்த ஆசாமி உலகைப் படைத்தவர் இயேசு கிறிஸ்து என்று கூசாமல் பொய் சொல்கிறார். இதிலிருந்தே இவர் பைபிளை புரிந்து படிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் பிதா, குமாரன் (இயேசு கிறிஸ்து) பரிசுத்தஆவியாக, திரியேக தேவனாக, மூவரும் ஒருவராக இருக்கின்றவர். அவராலேயன்றி இப்பிரபஞ்சத்தில் ஓர் அணுவும் அசைவதில்லை. அவருக்கு மறைவானது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை. அனைத்தையும் அவர் அறிவார். திருவாளர் தாயப்பன் கீழ்க்கண்டவாறு எழுதிள்ளார். திரியேக தேவனாக இருக்கும் மெய்ப்பொருள் கடவுள் திரியேக தேவனாக இருக்கிறார் அவர் தந்தையாகி உலகைப் படைத்தார். பாவத்தில் விழுந்த தன் மக்களை மீட்க இயேசு கிறிஸ்துவில் மைந்தரானார். பின் பரிசுத்த ஆவியானவராக வந்து ஞானவரம் அருளி திரியேகக்கடவுளாக மனிதர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரியேகமாக வெளிப்பட்டாலும் அவர் ஏக வஸ்துவே. ஆதலின் தேவன் ஒருவரே அன்றி மூவர் அல்லர். மூவரும் ஒருவரில் ஒருவராக, சமநித்தியராக, சரிசமானராக , ஒன்றாக, ஒருவராக இருக்கின்றனர;. இதை இயேசு என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்கிறார் இந்த முட்டாள்கள் இயேசுவும் கர்த்தரும் ஒன்று என்று திரும்பத் திரும்ப பொய்யைச் சொல்லி எல்லோரையும் முட்டாள்களாக்குகின்றனர். கூசாமல் இயேசு உலகைப் படைத்தார் என்று பொய் கூறுகிறார்கள். இயேசு செத்தபின்தான் கர்த்தரின் வலது தொடையில் அமர்கிறார். அப்படியானால் அவரது மடியில் அவரே உட்கார்ந்து கொண்டாரா? பரமண்டலங்களில் இருக்கின்ற பிதாவே என்று இயேசு கூறுகிறார். அவரே அவரை அப்படி அழைத்துக்கொள்வாரா? கருவுர் சித்தரை அரசன் சிறையில் அடைத்தபோது மாயமாக மறைந்துவிட்டார். அதுபோல் ஏசுவும் மறைந்திருந்தால் அவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே? கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறி அழுகிறார். அவரே பரிசுத்த ஆவியாகவும், பிதாவாகவும் இருந்தால் ஏன் கதறி அழ வேண்டும். பரிசுத்த ஆவியாக மறைந்து விட வேண்டியதுதானே? நம் பாவங்களுக்காக மரித்தார் என்று புருடா விட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே? மறையும் சக்தி இல்லாத இயேசுவை மறையும் சக்தி கொண்ட சித்தர்கள் வழிபடச் சொல்கிறார்கள் என்று புளுகுகிறார். இயேசுவும் பரிசுத்த ஆவியும் ஒன்றா? அப்படியானால் பரிசுத்த ஆவி வந்து ஆட்டம் போடும், புரியாத பாஷைபேசி கூச்சல் போடும் கிறிஸ்தவர்களுக்குள் இயேசுதான் வந்து ஆட்டம் போடுகிறாரா? அவ்வாறு இயேசு வந்து ஆட்டம் போடுவதாக இருந்தால் செத்தவனை பிழைக்க வைத்து, அப்பத்தை ஆயிரம்பேருக்கு பங்கு போட்டுக் கொடுத்து, அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வியாதியஸ்தர்கள்மேல் கைவைத்து நோய்களைக் குணமாக்கிக் காட்டுவார்களா.? விஷத்தைக் குடித்துக் காட்டுவார்களா? கர்த்தர் உலகைப் படைக்கும் போது பரிசுத்த ஆவியும், லூசிபர் என்ற சாத்தானும் எங்கிருந்தார்கள்? என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? வேறு தேவ தூதர்கள் இருந்தார்களா? பரிசுத்த ஆவியும், சாத்தானும் எப்படி, எங்கிருந்து வந்தார்கள்? இவர்களுக்கு உருவம் உண்டா? இதற்கு தாயப்பன் விடை கூறுவாரா? ஆச்சப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு ஆறு லட்சம் கிரந்தமதை அருளிச் செய்தேன் பேச்சப்பா புரணத்தின் மூன்று லட்சம் பேசினேன் ஆயிரத்துள் அடக்கிப்போட்டேன் காய்ச்சப்பா ஆயிரத்தை ஐநூறாக்கி கட்டினேன் ஐநூற்றை நூற்றுக்குள்ளே மூச்சப்பா நூறதுவை ஐம்பதாக்கி முகித்திட்டேன் முப்பதுக்குள் முக்கியத்தானே அகத்தியர் தம் ஆயிரக்கணக்கான பாடல்களை 30 பாடல்களுக்குள் அடக்கிவிட்டாராம். அந்த 30 பாடல்களில் 20 பாடல்களை வெளியிட்டு அவற்றிற்கு விளக்கங்கள் என்று பிதற்றி இருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள பாடல்கள் உண்மையில் அகஸ்தியர் எழுதிய புத்தகங்களில் இருந்து எடுத்ததுதானா? என்றே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று புரிகிறது. இவர் அகத்தியர், புலிப்பாணி, கருவுரார், தேரையர் போன்ற சித்தர்களின் புத்தகங்களைப் படித்துப் பார்க்கவே இல்லை. கிருஷ்ணபிள்ளை என்ற மதம்மாறியை பெரிய ஆளாக நினைத்து அவருடைய பாடல்களை இடைஇடையே சேர்த்து தன் முட்டாள்தனத்தை காட்டுகிறார். 58 வயதுவரை இந்துவாக இருந்த இந்த ஆசாமியின் மகனை கர்த்தர் குணமாக்கி காப்பாற்றினாராம். அதற்காக மதம் மாறி இருக்கிறார். இவர் மகன் மீண்டும் விபத்திலோ வியாதியிலோ செத்துவிட்டால் இயேசு பொய்யான கடவுள் என்று மீண்டும் மதம் மாறுவாரா? ஏனென்றால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பலர் தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். வாழ்க்கைத் துணையை இழந்திருக்கிறார்கள். முச்சுடராம் ஒன்றாம் மும்மூர்த்தியல்ல மூவருமே ஆளுருவம் ஒன்றேயாகும் அச்சுதா இவர்களுமே ஆண் பெண் அல்ல அரனும் அல்ல, இலிங்கம் அல்ல, அநாதியான சச்சிதானந்தனையே வணக்கம் செய்து சத்குருவை தரிசித்து சரண் பற்றி, எச்சரிக்கை கொண்டு நட அப்பா! அப்பா! எண்ணிலா முத்திவழி எய்துவாயே இந்த பாடலுக்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார் பிதா, (குமாரன்) திருமைந்தர், பரிசுத்த ஆவியானவர் ஆகிய முச்சுடரும் ஒருவரே ஆவர். அவர்கள் மும்மூர்த்தியைப் போல வெவ்வேறு ஆனவர்கள் அல்லர். மூவருக்கும் ஆள் உருவம் ஒன்றேயாகும். திரித்துவக் கடவுள் ஆண் என்றும் பெண் என்றும் இல்லை. அரனும் அல்லர். இலிங்கமும் அல்லர். அவர் அநாதியானவர். சச்சிதானந்தர். அவரையே வணங்கி சற்குருவாகிய இயேசு கிறிஸ்துவைத் தரிசித்து, அவருடைய திருவடிகளில் சரணடைந்து பற்றிக்கொண்டு எச்சரிக்கையுடன் நீ நடப்பாயப்பா. அப்பொழுது எண்ணிக்கூற முடியாத பேரின்ப முக்தி வாழ்வினை நீ அடைவாய். இதுபோன்ற பிராடுகாரர்களை விவாதத்துக்கு அழைத்தால் வர மாட்டார்கள். ஆண்டவர் விவாதம் செய்பவர்களோடு பேசாதே என்று சொல்லி இருக்கிறார் என்பார்கள். இதுபோன்ற பிராடுகளிடம் இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சித்தர்கள் பற்றி இந்த ஆசாமி இந்த தளத்தில் படித்து பார்க்க வேண்டும். நீங்களும் படித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment