சபரி மலைக்கு விரதமிருந்து செல்வது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. மாலை போட்டு ஒரு வாரத்தில் சென்று வந்துவிடுகின்றனர். இவர்கள் ஏதோ பிக்னிக் போவதற்காக செல்கிறார்கள் என்று தெரிகிறது. சபரிமலைக்கு விரதமிருந்து செல்வது என்பது பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக இருப்பது. அதுவும் கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய குளிர் மாதங்களில் இந்த விரதம் இருப்பது ஒருவருடத்திற்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கும். ஒருபுறம் மலையில் நடை பயணம். மறுபுறம் இருவேளை குளியல் மற்றும் புஜை. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தையை மறந்து விட்டு செருப்பு அணிந்து செல்லும் பல ஐயப்பபக்தர்களை பார்த்திருக்கிறேன். கடைகளில் நின்று பீடி சிகரெட் புகைப்பவர்களும் இருக்கிறார்கள். 40 நாட்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் ஏன் விரதமிருக்க வேண்டும். எப்பொழுது தங்களைக் கட்டுப்படுத்தி விரதமிருக்க முடியும் என்ற வைராக்கியம் வருகிறதோ அப்பொழுது விரதமிருக்கலாமே. ஒருவாரத்தில் மாலைபோட்டு சபரிமலை சென்றுவரும் முறையைக் கண்டுபிடித்த மகான் யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் 30 வருடங்கள் முன்பும் பக்தர்கள் விரதமிருந்து சென்றார்கள். அப்பொழுது இருந்தவர்களின் பக்தி உண்மையான பக்தியாக இருந்தது. பெருவழியில் காலணி இல்லாமல் நடந்து செல்வார்கள். தண்ணீர் கூட குடிப்பதற்கு கிடைக்காது. பாதை வசதி கிடையாது. மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். எந்த வசதியும் இல்லாமல் கடும் விரதமிருந்த அவர்களை நினைக்கும்போது தற்போது போலி விரதமிருப்பவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இப்படி அரைகுறை விரதமிருப்பவர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இவர்களின் செயல்களில் ஐயப்ப பக்தருக்குரிய பொறுமை, பண்பாக பேசுதல், கோபப்படாமல் இருத்தல் போன்ற குணங்கள் இல்லாமல் பிரச்னை ஏற்படுத்துபவர்களாகவும், சண்டையிடுபவர்களாகவும் இருக்கின்றனர். மலையை விட்டு இறங்கியவுடன் போதை ஏற்றுபவர்களும் இருக்கிறார்கள். நம்மாலும் உண்மையாக விரதமிருக்க முடியும் என்ற மன பக்குவம் வந்த பின்பு ஐயப்பனுக்கு மாலைபோட்டு செல்வது அனைவருக்கும் நல்லது. அந்த மனபக்குவம் இல்லாதவர்கள் சும்மா இருப்பது மேல்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழன் உணவை உண்டு வாழும் தமிழர்களில் சிலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய மகான்களை, ரிஷிகள் எழுதிய தேவாரம் திருவாகம் திவ்யபிரந்தம் போன்ற நூல்களை நம்பாமல் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அரேபியனும் யூதனும் எழுதி வைத்த கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்து தமிழ்க்கலாச்சாரத்தை அழிக்க முயலும் அந்நியா்களின் சதிக்கு பலியாகிறாா்கள். அவர்களை மீட்க வேண்டும்.
Followers
Monday, 23 November 2015
சபரி மலைக்கு விரதமிருக்கிறீர்களா?
சபரி மலைக்கு விரதமிருந்து செல்வது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. மாலை போட்டு ஒரு வாரத்தில் சென்று வந்துவிடுகின்றனர். இவர்கள் ஏதோ பிக்னிக் போவதற்காக செல்கிறார்கள் என்று தெரிகிறது. சபரிமலைக்கு விரதமிருந்து செல்வது என்பது பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக இருப்பது. அதுவும் கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய குளிர் மாதங்களில் இந்த விரதம் இருப்பது ஒருவருடத்திற்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கும். ஒருபுறம் மலையில் நடை பயணம். மறுபுறம் இருவேளை குளியல் மற்றும் புஜை. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தையை மறந்து விட்டு செருப்பு அணிந்து செல்லும் பல ஐயப்பபக்தர்களை பார்த்திருக்கிறேன். கடைகளில் நின்று பீடி சிகரெட் புகைப்பவர்களும் இருக்கிறார்கள். 40 நாட்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் ஏன் விரதமிருக்க வேண்டும். எப்பொழுது தங்களைக் கட்டுப்படுத்தி விரதமிருக்க முடியும் என்ற வைராக்கியம் வருகிறதோ அப்பொழுது விரதமிருக்கலாமே. ஒருவாரத்தில் மாலைபோட்டு சபரிமலை சென்றுவரும் முறையைக் கண்டுபிடித்த மகான் யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் 30 வருடங்கள் முன்பும் பக்தர்கள் விரதமிருந்து சென்றார்கள். அப்பொழுது இருந்தவர்களின் பக்தி உண்மையான பக்தியாக இருந்தது. பெருவழியில் காலணி இல்லாமல் நடந்து செல்வார்கள். தண்ணீர் கூட குடிப்பதற்கு கிடைக்காது. பாதை வசதி கிடையாது. மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். எந்த வசதியும் இல்லாமல் கடும் விரதமிருந்த அவர்களை நினைக்கும்போது தற்போது போலி விரதமிருப்பவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இப்படி அரைகுறை விரதமிருப்பவர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இவர்களின் செயல்களில் ஐயப்ப பக்தருக்குரிய பொறுமை, பண்பாக பேசுதல், கோபப்படாமல் இருத்தல் போன்ற குணங்கள் இல்லாமல் பிரச்னை ஏற்படுத்துபவர்களாகவும், சண்டையிடுபவர்களாகவும் இருக்கின்றனர். மலையை விட்டு இறங்கியவுடன் போதை ஏற்றுபவர்களும் இருக்கிறார்கள். நம்மாலும் உண்மையாக விரதமிருக்க முடியும் என்ற மன பக்குவம் வந்த பின்பு ஐயப்பனுக்கு மாலைபோட்டு செல்வது அனைவருக்கும் நல்லது. அந்த மனபக்குவம் இல்லாதவர்கள் சும்மா இருப்பது மேல்.
Labels:
இந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment