Followers

Monday, 23 November 2015

இந்துக்கள் அல்லாதவர்கள்கேரவிலுக்குள் வரலாமா


இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் வரக்கூடாது என்று சில கோவில்களில் எழுதி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களை புனிதமாக கருதுவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் பார்த்தால் இது சரிதான். ஆனால் என் அனுபவம் வேறு

  ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். மிக நீண்ட வரிசையில் எனக்கு முன் ஐம்பது வயதிருக்கும் ஒரு தம்பதியர் கையில் அர்ச்சனை செய்வதற்குரிய தேங்காய் , பழம் தட்டோடு நின்றனர். பெரியவர் மொட்டை போட்டிருந்தார். வரிசை நகர்ந்து கொண்டிருந்தபோது அந்த பெரியவர் திடீரென அர்ச்சனைக்குரிய பொருள்களை என்னிடம் கொடுத்துநான் ஒரு முஸ்லீம். கோவிலுக்குள் வரக்கூடாது. அதனால் நீங்கள் எனக்கு பதிலாக புஜைக்கு கொடுத்து விடுங்கள்என்றார். அதற்கு நான்கடவுளைப்பொறுத்தவரை அனைவரும் குழந்தைகளே. அவரைப் பொருத்தவரை ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படி யாராவது உங்களை கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் அவர் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் தாராளமாக வந்து அம்மனை வழிபடலாம்என்றேன். ஏதாவது வேண்டுதலா? என்று கேட்டேன். மஞ்சள்காமாலையால் பிழைக்க மாட்டேன் என்ற நிலையில் மொட்டை போடுவதாக அம்மனை வேண்டினேன். பிழைத்துக்கொண்டேன். அந்த பிரார்த்தனையை செலுத்த வந்தேன் என்றார். ”அம்மன் உங்களைக் காப்பாற்றியதே உங்களை இங்குவந்து தரிசிக்க வைப்பதற்குத்தான். அம்மனைக் காணாமல் போகலாமா? ” என்றேன். மிகவும் மகிழ்ச்சியோடு தரிசனம் செய்து சென்றார். எனவே பக்தியோடு வருபவா்கள் யாராக இருந்தாலும் கோவிலுக்கு வந்து வணங்கலாம். மற்ற மதங்கள் எல்லாம் மதம் மாறுவதற்கு சடங்குகளை வைத்திருக்கின்றன. ஆனால் இந்து மதத்தில் அப்படிஏதும் கிடையாது.

No comments:

Post a Comment